திருவள்ளூர் காய்கறி சந்தையில் கணவனுடன் பழக்கத்தில் இருக்கும் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
புல்லரம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் ராஜேஷ்வரி என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில் சுரேஷ்ஷுக்கும் அவருடைய மனைவி பார்வதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது கடையில் ராஜேஷ்வரி அமர்ந்து இருந்ததை பார்த்த பார்வதி ஆத்திரத்தில் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் ராஜேஷ்வரி உயிரிழந்த நிலையில் பார்வதி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.