சென்னை, பள்ளிக்கரணையில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, தண்ணீர் வீணாவதை தடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.