கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை கிராமத்தில் பள்ளி அருகே கட்டப்பட்டு வரும் வெடிமருந்து குடோனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கல்குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை இருப்பு வைப்பதற்காக அனுமதியின்றி குடோன் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் குடோனை வேறு இடத்தில் அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.