கொட்டுக்காளி பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்தியன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இயக்குநர் வினோத்ராஜ் தமிழ் சினிமாவின் பெருமை என்றும், தான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்லிக்காட்ட மாட்டேன் என்றும் கூறினார். சிவகார்த்தியன் யார் பேரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.