வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டதன் 47வது ஆண்டு தினத்தையொட்டி பயணிகள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரையின் முதல் பகல் நேர வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையை பெற்ற வைகை எக்ஸ்பிரஸின் 47வது பிறந்தநாளையொட்டி பயணிகள் கேக் வெட்டியும், ரயில் ஓட்டுநர்களுக்கு பரிசுகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.