வெள்ளிப் பதக்கம் வேண்டும் என வினேஷ் போகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவானது தற்போது தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.