அமெரிக்காவில் விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர், விமான நிறுவன ஊழியர் மீது கணினி திரையை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிகாகோவில் உள்ள O’Hare விமான நிலையத்தில் இருந்து Frontier Airlines விமானத்தில் புறப்பட வேண்டிய பெண் பயணி ஒருவர், விமானத்தை தவற விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அவர், Frontier Airlines அலுவலகத்திற்குள் நுழைந்து ஊழியர்களை பார்த்து கோபமாக கத்தியதோடு, கணினி திரைகளை தூக்கி எறிந்தார். இது தொடர்பாக, அப்பெண் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.