கருணாநிதி கொண்டு வந்த அரசாணை எண் 354- ஐ ஸ்டாலின் நடைமுறைப்படுத்த வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!
Sep 21, 2026, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருணாநிதி கொண்டு வந்த அரசாணை எண் 354- ஐ ஸ்டாலின் நடைமுறைப்படுத்த வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 09:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலின் தந்தை, மறைந்த கருணாநிதி கொண்டு வந்த அரசாணை எண் 354 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழக அரசு மருத்துவர்கள் நான்கரை ஆண்டுகளாக காத்திருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மருத்துவர்களை சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மருத்துவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த ஸ்டாலின்,  தற்போது அரசு மருத்துவர்களின் குரலை திட்டமிட்டு மவுனப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள், இன்று தங்கள் ஊதியத்துக்காக போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு நீதிமன்ற உத்தரவையும், தேசிய மருத்துவ அமைப்பின் அறிவுறுத்தலையும் கூட, திமுக அரசு ஒரு பொருட்டாக கருதவில்லை. அரசு மருத்துவர்களுக்கு, 12 ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய ஊதியப்பட்டை நான்கும் மறுக்கப்படுகிறது. DACP ஊதியமும் மறுக்கப்படுகிறது. பதிலாக, திமுக அரசு மருத்துவர்களைக் கைது செய்வது, பணியிட மாற்றம் செய்வது என, தண்டித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்திற்கு இன்னும் அரசு வேலை வழங்கவில்லை. போராட்ட களத்தில், அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர், மணிக்குமார் அவர்கள் உடலுக்கு மலர் வளையம் வைத்ததோடு சரி. சுகாதாரத்துறை அமைச்சரின் அரசியல் நாடகமும் முடிந்து விட்டது என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதமே, தமிழக பாஜக சார்பில், அரசு மருத்துவர்களுக்காகக் குரல் கொடுத்தோம். மக்கள் நல்வாழ்வும், மருத்துவர்கள் நலமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

ஆனால், திமுக அரசு, தொடர்ந்து மருத்துவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் ஆரோக்கியம் இதில் அடங்கியிருக்கிறது என்பதைக் கூட, முதலமைச்சர் ஸ்டாலின் உணரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உடனடியாக, அரசாணை எண் 354 அமல்படுத்தப்பட வேண்டும். மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு, அரசு வேலை வழங்க வேண்டும். மருத்துவர் மணிக்குமார் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும், உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று, அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: annamalaiChief Minister StalinGovernment Order No. 354doctors demands
Share
Tweet
SendShare
Previous Post

காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்துள்ளது காங்கிரஸ் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

அமெரிக்கா உடனான வர்த்தகம் ஒப்பந்தம் எப்போது நடைமுறைக்கு வரும்? – அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்!

Related News

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies