H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு - சிறப்பு தொகுப்பு!
Sep 21, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 21, 2026, 08:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதிய H-1B விசாக்களுக்கான 1,00,000 டாலர் கட்டண விதியை அடுத்த செப்டம்பர் 21 ஆம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் புதிய உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கையெழுத்திட்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்துவதைக் குறைக்கவும், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதன்முதலில் புதிய H-1B விசா கட்டண உயர்வை அதிபர் ட்ரம்ப் விதித்தார்.

இந்த செப்டம்பரில் காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், இது மீண்டும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

இக்கட்டண உயர்வு முற்றிலும் புதிய H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள், விசா புதுப்பித்தல் (Renewals) செய்பவர்கள் மற்றும் அமெரிக்காவில் படித்துவிட்டு விசா கோரும் மாணவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் கட்டண விதிக்கு எதிராக அமெரிக்க வர்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன.

முன்னதாக ஒரு நீதிமன்றம் இக்கட்டணத்தை ரத்து செய்திருந்தாலும், அரசு மேல்முறையீடு செய்து இந்த நீட்டிப்பு ஆணையைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைக் குறைப்பதோடு குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தச் சில நிறுவனங்கள் H1B விசா திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் படி, அதிபர் ட்ரம்பின் புதிய நிர்வாக உத்தரவில், இத்திட்டத்தைச் பெரிதும் சார்ந்திருக்கும் துறைகளில் H-1B ஊழியர்களுக்கும், அதே போன்ற பணிகளைச் செய்யும் அமெரிக்காவில் பிறந்த ஊழியர்களுக்கும் இடையே 9,000 முதல் 20,000 டாலர் வரையிலான ஊதிய இடைவெளி இருப்பதை அரசின் ஆய்வு காட்டுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் தொழில்நுட்பத் துறையில் 8 லட்சம் முதல் 13 லட்சம் வரையிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும், அதே துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் லட்சக்கணக்கான ஊழியர்களுக்காக H-1B விசாக்களுக்கு விண்ணப்பம் செய்திருந்தன என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆண்டுதோறும் நடைபெறும் H-1B தேர்வு செயல்முறையிலும் புதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த random selection system-க்கு பதிலாக, அதிக ஊதியம் மற்றும் உயர் திறன் தேவைப்படும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான ஒரு புதிய முறையை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 2027 நிதியாண்டிற்கான H-1B ஒதுக்கீட்டுச் சுழற்சியில் இந்த புதிய முறையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் கொண்டுவந்த H-1B விசா தொடர்பான புதிய விதிமுறைகள் ஏற்கனவே வேலைநாட்டவரை பணியமர்த்தல் முறைகளை மாற்றிவிட்டதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.

2025-ல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு ஐடி மற்றும் ஐடி அவுட்சோர்சிங் நிறுவனங்களின் H-1B பதிவு எண்ணிக்கை, 2 24,946-லிருந்து 2,055-ஆகக் குறைந்துள்ளது; இது சுமார் 92 சதவீத சரிவாகும்.

மேலும் 2025 மற்றும் 2027 நிதியாண்டுகளுக்கான H-1B ஒதுக்கீட்டுச் சுழற்சிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தூதரகச் செயலாக்கத்திற்கான கோரிக்கைகளும் கிட்டத்தட்ட 97 சதவீதம் குறைந்துள்ளன.

அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்ற ஊழியர்களை உள்ளடக்கிய மொத்தப் பதிவுகள் 2026-ல் 45.1 சதவீதமாக இருந்த நிலையில், 2027-ல் 66.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் H-1B விசாவுக்கான 100,000 டாலர் என்ற வருமான வரம்பு நிபந்தனையிலிருந்து H-1B தொடர்பான மற்றொரு கட்டண முன்மொழிவும் வெள்ளை மாளிகையில் பரிசீலனையில் உள்ளது.

அமெரிக்காவில் உயர்கல்விப் பட்டம் பெற்றவர்களுக்கான விலக்குக்கு உட்பட்ட மனுக்கள் உட்பட, ஒதுக்கீட்டு வரம்பிற்குள் வரும் ஒவ்வொரு H-1B மனுவிற்கும் 103,265 டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தது.

வழக்கமான 65,000 விசாக்களும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விப் பட்டங்களைப் பெற்ற தகுதியுள்ள பணியாளர்களுக்கான கூடுதல் 20,000 விசாக்களும் என ஆண்டுதோறும் வழங்கப்படும் மொத்தம் 85,000 H-1B விசாக்களுக்குப் புதிய கட்டணம் விதிக்கப்பட்டால், ஆண்டுக்கு சுமார் 8.8 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மதிப்பிட்டுள்ளது.

1,03,265 டாலர் கட்டணம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும் ஏற்கெனவே அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள 1,00,000 டாலர் கட்டணத்திலிருந்து இது வேறுபட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் H-1B தொடர்பான இந்த இரண்டு பெரிய கட்டணங்களும் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. H-1B விசாவுக்கான 1,00,000 டாலர் என்ற கட்டணத்துக்கான காலக் கெடுவை அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை அதிபர் ட்ரம்ப் நீட்டித்துள்ளார்.

Tags: H-1B visa wage requirementforeign workersUS Chamber of CommerceUS President Trumpnew H-1B visasH-1B visas hike
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Related News

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More

அண்மைச் செய்திகள்

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies