மத்திய உள்துறைச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கோவிந்த் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமாா் பல்லா வரும் 22-ம் தேதி ஓய்வுபெற்ற பின், அந்தப் பதவியை கோவிந்த் மோகன் ஏற்பாா் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல், அமலாக்கத்துறையின் இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.