காஞ்சிபுரம் அருகேயுள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக ஏகனாபுரம் கிராமத்தில் 750 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏழு முறை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 8-வது முறையாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.