திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சாமி தரிசனத்துக்கு வந்த மூவர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளப்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் கோவில் அருகே உள்ள தடாகம் பகுதியில் குடும்பத்துடன் குளித்தபோது, பள்ளி மாணவிகளான மேனகா, சோலை ஈஸ்வரி மற்றும் சங்கரேஷ்வரன் ஆகிய மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.