சென்னை நுங்கம்பாக்கத்தில் சமபந்தி போஜனத்திற்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சுமார் 2 மணி நேரமாக காத்திருந்தனர்.
நேற்று சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சமபந்தி நிகழ்வு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலில் சமபந்தி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அமைச்சர் சிவசங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற சமபந்தி நிகழ்வுக்கு அமைச்சர் சிவசங்கர் சென்றார். இதனால் 100க்கும் மேற்பட்ட மக்கள் பசியுடன் சுமார் 2 மணிநேரம் காக்க வைக்கப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினார்.