விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்வாரிய அலுவலக ஊழியரை இருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனுமந்தை கிராமத்தைச் சேர்ந்த தியாகு என்பவர் தனது சகோதரருடன் அங்குள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு மின் கட்டணம் செலுத்த சென்றார்.
அப்போது சில்லறை காசு கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனை அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் ராஜேந்திரன் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.