எடையை குறைப்பதற்காக வினேஷ் போகத் மேற்கொண்ட பயிற்சிகளைப் பார்த்ததும், எங்கே அவர் உயிரிழந்து விடுவாரோ என பயந்ததாக, அவரது பயிற்சியாளர் Woller Akos கூறியுள்ளார்.
ஒவ்வொரு மணி நேரமும், வெறும் 2 – 3 நிமிடங்கள் மட்டும் இடைவெளி எடுத்துக் கொண்டு வினேஷ் போகத் கடுமையாக பயிற்சி செய்ததாகவும், ஒரு முறை அவர் சுயநினைவிழந்து கீழே விழுந்ததாகவும், அவர் கூறியுள்ளார். வினேஷ் போகத்தின் கடுமையான உடற்பயிற்சிகளை பற்றி தன்னால் விரிவாக விளக்க முடியவில்லை என்றும் Woller Akos தெரிவித்துள்ளார்.