திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதர் கோயிலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.
தெற்கு கோபுர வாயில் வழியாக வருகை தந்த அவர், கருடாழ்வார் சன்னதி, மூலவர் மற்றும் தாயார் சன்னதியில் தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த பக்தர்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.