மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக ஜெயசிங் பொறுப்பேற்றார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக எம். ஜெயசிங் பொறுப்பேற்றார். புதிய பொறுப்புடன் கூடுதலாக சென்னையில் உள்ள தூர்தர்ஷனில் செய்திப்பிரிவு துணை இயக்குநரகாவும் ஜெயசிங் நீடிப்பார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த எம். பொன்னியின் செல்வன், டெல்லியில் உள்ள மத்திய மக்கள் தொடர்பகத்தின் இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அந்தப் பதவியில் ஜெயசிங் நியமிக்கப்பட்டார்.
இவர், 1993-ம் ஆண்டில் இந்திய தகவல் சேவையில் இணைந்து பணியாற்றிய காலத்திலிருந்து நீண்ட அனுபவம் பெற்றுள்ளார். அகில இந்திய வானொலி செய்திப்பிரிவு, தூர்தர்ஷன் செய்திப்பிரிவு, பத்திரிகை தகவல் அலுவலகம், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு இயக்ககம் உட்பட மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு ஊடகப்பிரிவுகளில் ஜெயசிங் பணியாற்றியுள்ளார்.