உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
வாரணாசியில் இருந்து அகமதாபாத்துக்கு செல்லும் சபர்மதி விரைவு ரயில் கான்பூரை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ரயில் திடீரென தடம் புரண்டதில் 22 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச்சென்றன.
இதில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை என தெரிவித்த அதிகாரிகள் ரயில் பாதையில் இருந்த பாறாங்கல்லால் இந்த விபத்து நேரிட்டதாக தெரிவித்துள்ளனர்.