வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 3-ஆவது பொருளாதாரமாக உயரும் என சர்வதேச நிதிய துணை மேலாண் இயக்குநர் கீதா கோபிநாத் கணித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், எதிர்பார்த்ததை விட இந்திய பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
2024-25 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக பதிவாகும் என சர்வதேச நிதியம் கணித்திருப்பதாக கீதா கோபிநாத் கூறினார்.