வயநாடு அருகே காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் நான்கு லட்ச ரூபாய் பணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சூரல்மலை பகுதியிலுள்ள வெள்ளார்மலை பள்ளியின் பின்புறம் உள்ள ஆற்றில் இருந்து பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த நான்கு லட்ச ரூபாயை தீயணைப்புத்துறையினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.