திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான புகார் பேரில் விசாரணை நடத்திய நவல்பட்டு போலீசார், நிலத்தை விற்பனை செய்வதற்காக போலி ஆவணம் மற்றும் முத்திரை தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜெகநாதன், சாந்தி , காமராஜ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.