புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு கிழக்கு தொடக்கப் பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அச்சம் அடைந்தனர்.
வகுப்பறையில் தகவல் பலகை மேல் சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதைக் கண்ட மாணவர்கள் அச்சம் அடைந்து வகுப்பையில் இருந்து வெளியே ஓட்டம் எடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் லாவகமாக பாம்பை பிடித்து சென்றனர். பாம்பு வருவதற்கு காரணமான அருகில் உள்ள குளத்தை சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.