ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே 7 வயது சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்மாவள்ளம் மலை கிராமத்தை சேர்ந்த மாதேவாவின் மூத்த மகள் அகல்யா வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென சிறுமியை மாயமானதால் பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.
பின்னர் சிறுமி தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.