தஞ்சை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாட்டில் கடந்த 12ஆம் தேதி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான சுப்பிரமணியனை தேடி வந்தனர்.
இந்நிலையில், சேதுபாவாசத்திரம் பகுதியில் சுற்றி திரிந்த சுப்பிரமணியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், அவரை காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.