உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி தூக்கி சென்ற இளைஞர்கள்!
Sep 13, 2026, 05:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி தூக்கி சென்ற இளைஞர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 19, 2024, 11:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெரியகுளம் அருகே முறையான சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி செல்லப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லததால் கிராம மக்கள் ஆற்றை கடந்து பெரியகுளம் சென்று வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக கல்லாறு மற்றும் குப்பாம்பாறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சின்னூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி ஆற்றை கடந்து சின்னையம்பாளையம் சென்றனர். பின்னர் அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறித்த நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததால் பெண் உயிரிழந்ததாக வேதனை தெரிவித்துள்ள கிராம மக்கள், சின்னூர் கிராமத்திற்கு முறையாக சாலை வசதியும், ஆற்றின் குறுக்கே உயர்மட்டம் பாலமும் கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: The young people who carried the sick woman with a dolly!
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Next Post

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies