இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
சென்னையில் இந்திய கடலோர காவல்படை கட்டளை மைய திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த, ராகேஷ் பாலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ராகேஷ் பால் உடலுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.