ஆவணி அவிட்டத்தையொட்டி திருச்சி காவிரி படித்துறையில் பூணூல் மாற்றியும் மந்திரங்கள் ஓதியும் வழிபாடு நடைபெற்றது.
ஆவணி மாத பவுர்ணமியையொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நாளில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மற்றும் உபநயணம் செய்துக்கொண்ட பிராமணர்கள் மற்றும் விஸ்வகர்மா, செட்டியார் என பல பிரிவினர் ஆற்றங்கரைகளில் அல்லது குளக்கரைகளில் தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்துக்கொள்வர்.
அதன்படி, ஆவணி அவிட்டத்தையொட்டி திருச்சி காவிரிபடித்துறை, ஸ்ரீரங்கம் தனியார் மண்டபம் மற்றும் குருகுலங்களில் பூணூல் மாற்றும் சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. பூணூல் மாற்றி கொண்டவர்கள் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தும், காயத்ரி மந்திரங்களையும் ஜெபித்து வழிபட்டனர்.