பிலிப்பைன்ஸில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் பரவும் குரங்கம்மை நோய் உலகையே அச்சுறுத்தி வருவதால், உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸில் ஒருவருக்கு முதன்முறையாக அந்நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாத போதிலும், குரங்கம்மை பாதிப்புக்கு ஆளானதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.