திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
இந்த சேவையை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வந்த இந்த முனையத்தில், ஆட்டோக்கள் அனுமதிக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.