திருச்சி, ஸ்ரீரங்கத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் செல்லும் சாலையின் கீழ்ப்பகுதியில் பாதாள சாக்கடை குழாய் வெடித்து சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் மாற்றுவழியை பயன்படுத்தினர்.
இது போன்ற சம்பவம் பலமுறை நடப்பதாகவும் பாதாள சாக்கடை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.