புதுச்சேரியில் பராமரிப்பாளரை, ஒட்டகம் காலால் எட்டி உதைத்ததில் அவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
புது குப்பத்தில் இயங்கி வரும் ரிசார்ட்டில் உள்ள 2 ஒட்டங்களை மத்திய பிரதேசத்தை சேர்ந்த அஜய் மற்றும் ரமேஷ் குல்மி ஆகியோர் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் மது அருந்தி விட்டு ஒட்டகத்தின் மீது சவாரி செய்ய முயன்ற ரமேஷ் ஒட்டகம் எட்டி உதைத்ததில் உயிரிழந்தார்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.