ஸ்ரீபெரும்புதூரில் 706.50 கோடி செலவில் திறக்கப்பட்ட மகளிர் தங்கும் விடுதி முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியால் கட்டப்பட்டது என்றும், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் தமிழக அரசின் வேலை எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஸ்ரீபெரும்புதூரில் திறக்கப்பட்ட மகளிர் விடுதி மத்திய அரசின் நிதியால் கட்டப்பட்டது. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் தமிழக அரசின் வேலை எனத் தெரிவித்தார்.
கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அரசியலுக்காக மத்திய அரசின் நிதி மற்றும் திட்டங்களை தமிழக அரசு மறைத்து வருகிறது எனத் தெரிவித்தார்.
10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி நிதி தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ததது. மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதி கணக்கை தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிவித்தார்.