ஓபிசி இடஒதுக்கீட்டின் மீது காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் திடீர் பாசம் ஏன் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிவில் சர்வீஸ் பணியிடங்களில் இணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் நேரடி நியமனம் செய்யும் உத்தரவை காங்கிரஸ் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என விமர்சித்துள்ளார்.
2005ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தான் சிவில் சர்வீஸ் பணியிடங்களில் வீரப்ப மொய்லியின் பரிந்துரையை ஏற்று நேரடி நியமனம் செய்யப்பட்டதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஓபிசி இடஒதுக்கீட்டின் மீது காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் திடீர் பாசம் ஏன் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.