கார்கில் போரில் முக்கிய பங்காற்றிய முன்னாள் இந்திய ராணுவ தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 1940 -ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்த சுந்தரராஜன் பத்மநாபன், இந்திய ராணுவத்தின் நுண்ணறிவு பிரிவு தலைமை அதிகாரியாக பொறுப்பு வகித்ததுடன், கார்கில் போரில் முக்கிய பங்காற்றினார்.
மேலும், இந்திய எல்லையில் பாகிஸ்தானின் பல அத்துமீறல்களையும் முறியடித்தார். 2002 -ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னர், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சுந்தரராஜன் பத்மநாபன் இன்று உயிரிழந்தார்.
அவரது உடல் அடையாறு பெசன்ட் அவென்யூ சாலையில் உள்ள அவரது வீட்டில் இறுதி சடங்கிற்காக வைக்கப்பட்டுள்ளது. சுந்தரராஜன் பத்மநாபன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.