திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவத்தில், டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்காயம் அடுத்த முல்லைப் பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூளை தொழிலாளி பிரபு. தனது நண்பர்கள் 3 பேரை ஒரே இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அவர் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.
குடும்பத்தெரு பகுதியில் அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, இருசக்கர வாகனம் பக்கவாட்டில் உரசியதில், பிரபு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொரு நபர் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து போலீசுக்கு புகார் அளித்தும் வராததால், உறவினர்கள் சாலையின் நடுவே உடலை வைத்து மறியலில் ஈடுபட்டதுடன், டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக்கோரி வலியுறுத்தினர்.