காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆசி பெற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ்தள பதிவில், இன்றைய தினம், காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் பீடாதிபதி, ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து, ஆசிகளைப் பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி.
தமிழக பாஜகவின் என் மண் என் மக்கள் பயணம் தொடங்கும் முன்பாகவும், சுவாமிகளைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டிருந்தோம். சுவாமிகளை எப்போது சந்திக்கும்போதும், அறநெறிகளையும், நற்சிந்தனைகளையும், எந்தச் சூழ்நிலையிலும் கைவிடாது தொடர வேண்டும் எனும் அவரது அருள் வார்த்தைகள், தர்மத்தின் வழி நடக்கத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.
அப்போது தமிழக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் நாச்சியப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.