ஆந்திராவில் பிரியாணி மற்றும் சமோசா சாப்பிட்ட மாணவ மாணவிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், கைலாசபட்டினம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதிகளில் சில தினங்களுக்கு முன்பு சமோசா, பிரியாணி சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அனைவரும் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட நிலையில், 2 மாணவிகள், ஒரு மாணவர் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சட்டவிரோதமாக விடுதி நடத்தி வந்த கிருஷ்ணா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.