கோகுலஷ்டமியை முன்னிட்டு சேலத்தில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்jதனர்.
நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணன் சிலைகள், கிருஷ்ணன் வேடம் அணிய பயன்படுத்தப்படும் புல்லாங்குழல், கிரீடம் மற்றும் உடைகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், சேலத்தில் கலைநயத்துடன் களிமண், மற்றும் பேப்பர் கூழால் செய்யப்பட்ட விதவிதமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இதில், தவழும் கிருஷ்ணர், பசு கிருஷ்ணர், புல்லாங்குழல் கிருஷ்ணர், கோபியர் கிருஷ்ணர் என அரை அடி உயரம் முதல் மூன்றரை அடி உயரம் வரையிலான ஏராளமான வடிவங்களில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அழகான கிருஷ்ணர் பொம்மைகளை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.