மதுரை அகதிகள் முகாமில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசிடம் நிதி உள்ளதா? என அரசை நோக்கி நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
கள்ளச்சாராய உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கும் அரசு, மதுரை அகதிகள் முகாமில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க மறுப்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்தனர்.
மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.