சித்தர் போகரையும் புலிப்பாணி ஆதினத்தையும் புறக்கணித்து விட்டு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால், அதன் நோக்கம் பூர்த்தி ஆகாது என பக்தர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள முருக பக்தர்கள் மற்றும் பக்தி இலக்கிய அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழா நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி மைதானத்தில் அரங்கங்கள், மேடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், முருகனின் நவபாஷாண சிலையை செய்த போகர் சித்தருக்கு அரங்கம் அமைக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் அவரது சிஷ்யரான பழனி புலிப்பாணி ஆதினத்தின் பெயரையும் மாநாட்டின் அழைப்பிதழிலும் போடவில்லை என முருக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.