2026இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்றைய தினம், காஞ்சிபுரத்தில், தமிழக பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் 2024 மற்றும் மாநில பயிலரங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்றது.
உலக அளவில், அதிக உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய கட்சி, நமது பாஜக என்பது நமக்குப் பெருமை. நமது பாரதப் பிரதமர் மோடி
நல்லாட்சியாலும், ஆளுமைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொள்வதைக் காண்கிறோம்.
தமிழகத்திலும், பொதுமக்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள். வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். நமது பயணம், அதனை நோக்கி உறுதியுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா , மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.