கோவை மாவட்டத்தின் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதி மொழிக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக் குழுவினர், கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்கா கட்டும் பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன், தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும் மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் 2002ல் தொடங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாக கூறிய அவர், திட்டங்களை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.