ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணை பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பாறைகள் சரிந்து தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களை இணைக்கும் சாலையில் விழுந்தன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் சாலையில் உள்ள மண், பாறைகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.