தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் எய்ம்ஸ் உறைவிட மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அதன் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து எய்ம்ஸ் உறைவிட மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நோயாளிகளின் நலன் கருதி, உடனடியாக பணிக்குத் திரும்புமாறு எய்ம்ஸ் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.