மக்களவை தேர்தலில் சிறையிலிருந்தவாறு ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வென்ற என்ஜினீயர் ரஷீத், ஜாமீன் கோரி டெல்லி பாட்டீயாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதைப் பரிசீலித்த நீதிமன்றம், என்ஐஏ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. பாரமுல்லா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை பொறியாளர் ரஷீத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.