கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் NCC திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதாக கூறி போலி முகாம் நடைபெற்றது. அப்போது அதில் போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு சில மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கு தொடர்பாக, போலி பயிற்றுநர்கள் 5 பேரும், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த ஐஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்கின் விசாரணையை விரைவாக முடித்து, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்.