ஆந்திராவில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உலை வெடித்து ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் அனகபள்ளி அச்சுதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மதிய உணவு இடைவேளையின்போது பயங்கர சப்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியது. இதில், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அனகபள்ளி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபிகா பாட்டீல் தெரிவித்தார்.
















