உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக போலந்து நாட்டின் தலைநகர் வார்சா சென்றடைந்த பிரதமர் மோடி, போலந்து இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது, தமக்கு கிடைத்த அன்பான வரவேற்புக்கு போலந்து நாட்டு மக்களுக்கு நன்றி கூறினார்.
அனைவருடனும் இணைய விரும்பும் இந்தியா, அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது என்றும், இன்று உலகமே இந்தியாவை விஸ்வபந்து என்று மதிப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இரக்க குணம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய பிரதமர், எந்த நாட்டிலும் எந்த பிரச்சினை வந்தாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான் எனவும் குறிப்பிட்டார். இப்பகுதியில், நிரந்தர அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புகிறது என்றும், இந்த நேரத்தில் போர் தேவையில்லாதது எனவும் கூறினார்.