ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை – திருவனந்தபுரம் இடையே சென்ற ஏர் இந்தியா 657 என்ற விமானத்திற்கு காலை 7.36 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் விமானம் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்துள்ளதாகவும், விமான நிலைய செயல்பாடுகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.