தமிழக மக்களுக்காக உழைப்போம் ; நடிகர் விஜய்
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மக்களுக்காக உழைப்போம் ; நடிகர் விஜய்

Murugesan M by Murugesan M
Aug 22, 2024, 12:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும்  உழைப்போம் என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடி அறிமுகம் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பனையூர் தலைமை அலுவலகம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் விழா மேடைக்கு சென்ற விஜய், தமிழக வெற்றிக் கழக உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். நெஞ்சில் கை வைத்து உறுதிமொழியை ஏற்கும்படி அவர் நிர்வாகிகளிடம அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், தலைமை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இரு வண்ணங்களில், 2 போர் யானைகள், வாகை மலருடன் இருக்கும் வகையில் கட்சி கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விழா மேடைக்கு மீண்டும் சென்ற நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகக் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடை வெளியிட்டார்.

பின்னர் விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய், கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியது பெருமையாக உள்ளது என்றும்,  கட்சிக் கொடிக்கான குறிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார். கொடியில் இடம் பெற்றுள்ள படங்களின் விளக்கம் முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்கப்படும் எனக்கூறிய அவர், முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இனி தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம் என குறிப்பிட்டார். இது கட்சிக்கொடி அல்ல, வருங்கால தலைமுறையினருக்கான வெற்றிக்கொடி எனக்குறிப்பிட்ட நடிகர் விஜய், தொண்டர்கள் அவரவர் இல்லத்தில் முறையாக அனுமதிப் பெற்று கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags: actor vijaytamilaga vetri kalgamactor vijay new party
Share
Tweet
SendShare
Previous Post

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தீவிர சோதனை!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிரஞ்சீவி சாமி தரிசனம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies